
அந்த கனவு
எப்பொழுதும் வரும்.
உறக்கம் கலைந்தும்..
நினைவில் நிற்கும்.
அடர்ந்த வனத்தின்
ஒற்றை மனிதனாய்
நீண்ட நேரம்
அலைந்திருப்பேன்..
பசி தொலைத்து..
நினைவு தொலைத்து..
உலகத்தையே தொலைத்து..
தனியே நான் மட்டும்.
வனம் அதிர..
பெருங்குரலெடுத்து
எவனோ பாடும் பாடல்...
உயிரின் நரம்புகளை
மீட்டி செல்லும்.
அவன் பாடலில்..
செழித்து வளரும்
வனம் மெல்ல..
என் மீது படர துவங்கும்.
அடர்ந்த வனத்தின்..
இருள் கிழித்தபடி பாயும்..
ஒளியை சுவாசிக்கும் முன்னே..
உறக்கம் தொலைத்திருப்பேன்.
பின் வந்த நாட்களில்
மெல்ல மெல்ல
பாடல் தொலைய தொடங்கியது.
பாடலை தொலைத்த வனம்
கருக தொடங்கியது...
பின்னொரு நாளில்
வனமும் மொத்தமாய் தொலைந்தது.
இப்பொழுதெல்லாம்
கனவுகள் வருவதில்லை.
கனவுகளில் தொலைத்தவன்...
கனவையே தொலைத்து விட்டேன்.
(இது உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு
நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.)
16 comments:
Tholaindha vanathodu kanavugalum tholaindhu vittadhu...
arumai sasi.. vetri pera vaalthugal.. :-)
நல்லா இருக்குங்க சசி. வெற்றி பெற வாழ்த்துக்கள்
வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்லாருக்குங்க.
--வித்யா
VERY NICE MA..
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
எல்லாமே அருமை!!
சரியா சொன்னீங்க... என் மனசிலிருப்பதை!!
//அடர்ந்த வனத்தின்..
இருள்(?) கிழித்தபடி பாயும்..
ஒளியை(?) சுவாசிக்கும் முன்னே..
உறக்கம் தொலைத்திருப்பேன்.//
தேர்ந்த வரிகள்..வெற்றி பெற வாழ்த்துக்கள்.
//Tholaindha vanathodu kanavugalum tholaindhu vittadhu...
arumai sasi.. vetri pera vaalthugal.. :-)//
Nanri ram...:))
//நல்லா இருக்குங்க சசி. வெற்றி பெற வாழ்த்துக்கள்//
Nanri navasutheen..:)
//வெற்றி பெற வாழ்த்துக்கள். நல்லாருக்குங்க.
--வித்யா//
Nanringa Vithya..:)
@Aarumugam and Thiyavin pena...
Romba nanringa...:)
//எல்லாமே அருமை!!
சரியா சொன்னீங்க... என் மனசிலிருப்பதை!!//
:)
////அடர்ந்த வனத்தின்..
இருள்(?) கிழித்தபடி பாயும்..
ஒளியை(?) சுவாசிக்கும் முன்னே..
உறக்கம் தொலைத்திருப்பேன்.//
தேர்ந்த வரிகள்..வெற்றி பெற வாழ்த்துக்கள்.//
Romba nanri sivaji shankar..:)
//வனம் அதிர..
பெருங்குரலெடுத்து
எவனோ பாடும் பாடல்...
உயிரின் நரம்புகளை
மீட்டி செல்லும்.//
ரசித்தேன்...
நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்....
arumai sasi:)
wish u to get success...
//அவன் பாடலில்..
செழித்து வளரும்
வனம் மெல்ல..
என் மீது படர துவங்கும்//
அருமை சசிதரன் தேவேந்திரன்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
Post a Comment