Tuesday, August 26, 2008

இன்னும் ஓர் இரவு...


சலனமற்று துவங்குகிறது மற்றுமொரு காலை...
யாருமற்ற மேசையில் தனியே
உணவருந்த வேண்டும் என்கிற நினைவே....
காலை உணவை மறுக்க செய்கிறது...

நினைவில் வர மறுக்கும் நேற்றைய கனவுகளை
தேடி தேடியே தொலைந்து போகிறது
எனது பகலும் சில நினைவுகளும்...

யாருமற்று கழியும் மாலை பொழுதுகள்...
இரவு நேர மயானமாய்
இரைச்சல் நிறைந்த மனதின்
தனிமையை போக்க முயல்கிறேன்...
சில நேரம் வண்ணங்கள் கொண்டும்..
வண்ணங்கள் வாய்க்காத தருணங்களில் உதிரம் கொண்டும்...

உறங்கி போனதாய் நினைக்கும் வேளையில்...
மூடிய இமைகளின் வழியே வெளியேறும்...
சிறு கண்ணீரும் சில கனவுகளும்...

எஞ்சிய எனது கருப்பு வெள்ளை கனவுகளும்
குருதி பாய்ந்து வண்ணமாகிறது...
திடுக்கிட்டு எழுகையில் கடந்து போகிறது...
உறக்கம் தொலைத்த இன்னும் ஓர் இரவு...

4 comments:

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்கு கவிதை....
உங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சிவாஜி சங்கர் said...

நல்ல கவிதை :) வரும் ஆண்டு கவிபணி மேலும் சிறக்க புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Sasidharan Devendran said...
This comment has been removed by the author.
Sasidharan Devendran said...

Nanri Nanbargale...:)